எழுத்து கூட்டி படித்த ஆங்கில ஆசிரியர் சஸ்பெண்ட்..!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் தேவேந்திர குமார்

By murugan | Published: Dec 02, 2019 07:55 AM

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் தேவேந்திர குமார் பாண்டே இவர்  இரண்டு நாள்களுக்கு முன் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு திடீரென ஆய்வு செய்தார். அப்போது அரசு பள்ளிக்கு சென்ற அவர் எட்டாம் வகுப்பு வகுப்புக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் பாடம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டார். அதற்கு மாணவர்கள் பதில் தெரியாமல் விழித்தனர். பின்னர் ஆங்கில பாட புத்தகத்தை கொடுத்து அவர் வாசிக்க சொன்னார். மாணவர்கள் சிலர் சரியாக உச்சரிக்க கூட தெரியாமல் நின்றனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சந்தேகம் அதிகமாக உடனே ஆங்கில ஆசிரியர் ராஜகுமாரி இடம் ஆங்கில புத்தகத்தை கொடுத்து வாசிக்கச் சொன்னார். அப்போது அந்த ஆங்கில ஆசிரியர் எழுத்துக்கூட்டி ஆங்கிலம் வாசித்து படித்தார். இதைப்பார்த்த ஆட்சியை அதிர்ச்சி அடைந்தார். பின்னர்  ராஜகுமாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
Step2: Place in ads Display sections

unicc