உலகக்கோப்பையில் விக்கெட் வேட்டையை நடத்திய இங்கிலாந்து வீரர்கள்!

நேற்றைய  இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து பலப்பரீட்சை லண்டனில்

By murugan | Published: Jul 15, 2019 06:40 PM

நேற்றைய  இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து பலப்பரீட்சை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது . இப்போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டை  இழந்து  241 ரன்கள் எடுத்தது. பின்னர் 242 ரன்கள் இலக்குடன் இறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது.பிறகு நடத்தப்பட்ட சூப்பர் ஓவர் போட்டியும் டை ஆனது. இதனால் இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணியின்  அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு  உலகக்கோப்பை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சார்பில் அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஜோஃப்ரா ஆர்ச்சர் படைத்தது உள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர் நடப்பு உலககோப்பையில் 100.5 ஓவர் வீசி 20 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர் அடுத்த இடத்தில் மார்க் வுட் 18 , கிறிஸ் வோக்ஸ் 16 விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்.இவர்கள் மூன்று பேருமே நடப்பு உலககோப்பையில் விக்கெட் வேட்டையை நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    
Step2: Place in ads Display sections

unicc