25 பந்தில் சதம் அடித்து இங்கிலாந்து வீரர் அசத்தல்.

  • துபாயில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லங்க்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் சதம் அடித்து அசத்தினார். 
  • லங்ஷைர் அணி 9.3 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளை இழந்து வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் அண்டர் 19 வீரர் வில் ஜக்ஸ் துபாயில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லங்க்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

சர்ரே அணி சார்பாக ஆடிய 5-வது ஓவரில்  கிராஃப்ட் வீசிய பந்தில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தினார்.

இறுதியில், 30 பந்தில் 105 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது சர்ரே அணி.

லங்ஷைர் அணி 9.3 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளை இழந்து வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

author avatar
Vignesh

Leave a Comment