முதல் முறையாக அதிக சேசிங் ரன்களை அடித்த இங்கிலாந்து ..!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று

By murugan | Published: Aug 27, 2019 07:45 AM

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து  அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் இலக்காக இருந்தது. தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால்  இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது. இதைத்தொடர்ந்து நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இந்நிலையில் இங்கிலாந்து அணி இதற்கு முன் 1928-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 332 ரன்களை  சேசிங் செய்தது அதுவே அதிகபட்ச ரன்களாக  இருந்தது. ஆனால் தற்போது சேசிங்கில் அந்த சாதனையை முறியடித்து அதிகபட்சமாக 386 ரன்களை வைத்து உள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc