மீண்டும் ஒரு கிரிக்கெட் வீரர் மரணம்

மீண்டும் ஒரு கிரிக்கெட் வீரர் மரணம்

  • இங்கிலாந்தை சேர்ந்த கவுன்டி அணியான யர்க்க்ஷைர் ஆடிவந்த மிக்கே எக்லின் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார்.
  • அவரின் பிரிவு அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும்

இங்கிலாந்தை சேர்ந்த கவுன்டி அணியான யர்க்க்ஷைர் ஆடிவந்த மிக்கே எக்லின் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார்.

இவர் யர்க்க்ஷைர் அணிக்காக 2013ஆம் ஆண்டிலிருந்து ஆடி வருகிறார். யர்க்க்ஷைர் பி அணியின் வீரராக இருந்து, பின்னர் 2016 ஆம் ஆண்டு அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதன் யர்க்க்ஷைர் ஏ அணிக்கு பொறுப்பேற்று ஆடி வந்தார். தனது தோழியான அண்ணாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அணி உரிமையாளர் கூறுகையில் “அவர் ஒரு சிறந்த வீரர், ஒரு அணியாக செயல்பட எப்பவும் உதவுபவர். மைதானத்தில் வீரர்களை ஊக்கப்படுத்தும் அவர், வீரர்கள் உற்சாகமாக மனநிலையில் இருக்க முயற்சிப்பார். அவரின் பிரிவு அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும்” என்றார்.

author avatar
Vignesh
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *