2019-ல் மூன்று முறை100 ரன்கள் கூட எடுக்காமல் ஆல் அவுட் ஆன இங்கிலாந்து ..!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று

By murugan | Published: Aug 24, 2019 10:14 AM

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முந்தினம்  தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 52.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.ஆர்ச்சர் 6 விக்கெட்டை பறித்தார். பின்னர் இரண்டாம் நாள் நேற்று  தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து விக்கெட்டை சீட்டுகட்டு போல சரிந்தது. இறுதியாக இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ டென்லி 12 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்த வருடம் மட்டும் நடைபெற்ற  டெஸ்ட் போட்டி இன்னிங்சில் மூன்று முறை 100 ரன்னிற்கு குறைவாக அடித்து ஆல் அவுட் ஆகி உள்ளது. 77/10 vs வெஸ்ட் இண்டீஸ் 85/10 vs அயர்லாந்து 67/10 vs ஆஸ்திரேலியா
Step2: Place in ads Display sections

unicc