பொறியியல் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இணையத்தில் வெளியானது!

நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண்  இணையத்திலும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு குறுச்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பொறியியளுக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப இயக்குனரகம் நடத்தும் நிலையில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.இவர்களுக்கான ரேண்டம் எண் கணினி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.மேலும், மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 7 முதல் 12 வரை கணினி வாயிலாகவும் , கலந்தாய்வானது ஜூன் 17 முதல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.