பா.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் வந்ததை அடுத்து தற்போது குவிந்த அமலாக்க துறையினர்!

ஐஎன்எக்ஸ் நிறுவனம் மீது 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் காரணமாக முன்ஜாமீன் கேட்டு, நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பா.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  பிறகு அவர்கள் வீட்டில் இல்லை என தெரிந்ததும் திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் தற்போது அமலாக்க துறையினர் பா.சிதம்பரம் வீட்டில் வந்து  சோதனை செய்து வருகின்றனர். பா.சிதம்பரம் வீட்டில் இருக்கிறாரா என விசாரித்து வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்த வேண்டியதால் அமலாக்க துறையினர் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.