முந்துங்கள் இன்றுடன் முடிவடைகிறது.! தெற்கு ரயில்வே துறையில் 3655 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு.!

முந்துங்கள் இன்றுடன் முடிவடைகிறது.! தெற்கு ரயில்வே துறையில் 3655 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு.!

  • தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 3655 காலியிடங்கள் உள்ளது.
  • அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே துறையில் பணிபுரிய வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். பின்னர் அதற்கு முறையான அப்பரண்டீஸ் பயிற்சி பெற்றால் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 3655 காலியிடங்கள் உள்ளது. இந்த வாய்ப்பு இன்றுடன் முடிவடைகிறது.

மெக்கானிக்கல் வேலைவாய்ப்பு : தெற்கு ரயில்வே பிட்டர், வெல்டர் மெக்கானிக், எலக்ட்ரீசியன், டீசல் மெக்கானிக், ஏசி, பிரிட்ஜ் மெக்கானிக், எம்எம்வி, எலெக்ட்ரானிக் மெக்கானிக், பிஏஎஸ்எஸ்ஏ, எம்எல்டி ரேடியாலஜி, எம்எல்டி கார்டியாலஜி, கார்பெண்டர், பெயிண்டர், வயர்மேன், டர்னர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஒராண்டு முதல் இரண்டு ஆண்டு அப்பரண்டீஸ் பயிற்சி அளிக்கப்படும்.

படிப்பு மற்றும் வயது தகுதி : 10-ம் வகுப்பு படித்தவர்கள் பொது பிரிவினருக்கு 15 வயது முதல் 22 வயது வரை தகுதி இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 15 வயது முதல் 25 வயது வரையும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 15 முதல் 27 வயது வரையும். மாற்றுத்திறனாளிகள் 15 முதல் 32 வயது வரையும். ஐடிஐ படித்தவர்கள் என்றால் பொதுபிரிவினர் 24 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 27 வயது வரையும், எஸ்சி எஸ்டி பிரிவினர் 29 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் 34 வயது வரையும் அப்பரண்டீஸ் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்ற https://sr.indianrailways.gov.in/ கிளிக் செய்து இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

தேர்வுமுறை : இதற்கு தேர்வு எதும் இல்லை. 10-வது மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள். வெளிமாநிலத்தவர் இதில் கலந்து கொள்ள முடியாது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், மாலை 5 மணி வரை மட்டுமே கால அவகாசம் அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாத சம்பளம் : மாதம் ரூ.10 ஆயிரம் அளிக்கப்படும். இந்த அப்பரண்டீஸ் பயிற்சி முடிப்பவர்களுக்கு, லெவல் 1 தேர்வு நேரடி சேர்க்கையின் போது 20% சதவீதம் வேலைக்கு அப்பரண்டீஸ் பயிற்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை தெற்கு ரயில்வே துறை அளிக்கும்.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube