காலியாகிறது தினகரன் கூடாரம் ! நிர்வாகிகளுடன் அதிமுகவில் இணைய புகழேந்தி முடிவு

அம‌முக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய

By venu | Published: Nov 10, 2019 03:20 PM

அம‌முக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளனர். அமமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தினகரன் மற்றும் புகழேந்தி  இருவருக்கும்  இடையே கருத்து மோதல்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் அம‌முக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து  புகழேந்தி உள்ளிட்ட அமமுக அதிருப்தியாளர்கள் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைகின்றனர்.சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.    
Step2: Place in ads Display sections

unicc