ஊழியர்களுக்கு சிறப்பூதியம் வழங்கவேண்டும் – முக ஸ்டாலின்

ஊழியர்களுக்கு சிறப்பூதியம் வழங்கவேண்டும் – முக ஸ்டாலின்

திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் காணொளி மூலம் தோழமைகட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனாவால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பிறகு நிறைவேற்றம் செய்யப்பட்ட தீர்மானங்களை தெரிவித்தார்.
அதில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உயிரிழப்பிற்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணம் போதாது என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கு சிறப்பூதியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube