நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில்,சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ட்வீட்டர் நிறுவனம் என்.ஜி.கே. திரைப்படத்திற்கு எமோஜி வழங்கியுள்ளது. மேலும், இதற்கு முன்பு மெர்சல் மற்றும் காலா திரைப்படத்திற்கு எமோஜி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.