தமிழின் தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கம்

தமிழக  பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டு 12 ஆம்  வகுப்பிற்கு புதிய பாடத்திட்டத்தை  அறிமுகப்படுத்தப்படுத்தியது .12 ஆம்  வகுப்பு  ஆங்கில புத்தகத்தில் தமிழ் மொழி  2300 ஆண்டுகள் பழமையானது என்று இடம்பெற்றிருந்தது .இது பெரும் சர்சையாக வெடித்தது.

பின்னர் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.அவர் அளித்த விளக்கத்தில், 2ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில்உள்ளது  உடனடியாக மாற்றப்படும்.தவறாக குறிப்பிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில்  தற்போது 12ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.