வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடும் சோதனைக்குப் பிறகே முகவர்கள் அனுமதி

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடும் சோதனைக்குப் பிறகே முகவர்கள் அனுமதி

Default Image

வாக்கு எண்ணிக்கை மையங்களில் சோதனைக்குப் பிறகு முகவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த தேர்தலில் மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது.

மற்ற தொகுதிகளில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக 373 தொகுதிகளில் மோதியது.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இன்னும் ஒரு மணி நேரத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன் படி வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்குகள் எல்லாம் கொண்டுவரப்பட்ட  நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடும் சோதனைக்குப் பிறகே  முகவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

Join our channel google news Youtube