கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு !கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்

இந்து தீவிரவாதம் என பிரசாரத்தில் கமல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று

By Fahad | Published: Apr 02 2020 06:59 PM

இந்து தீவிரவாதம் என பிரசாரத்தில் கமல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், தீவிரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே . இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும். தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.இவரது இந்த கருத்து  கடும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம், இந்து தீவிரவாதம் என பிரசாரத்தில் கமல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.