முட்டை விலை குறைந்துள்ளது – உங்கள் குழந்தைகளுக்கு முட்டை வட்லப்பம் செய்து கொடுங்கள்!

தற்பொழுது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் 10 நாட்களுக்கு மேலாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோழி மற்றும் முட்டையில் வைரஸ் தொற்று இருக்கும் என்று பேசப்பட்டாலும் அது உண்மையல்ல என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த முட்டையின் விலை ஆனால் குறைந்தது குறைந்து வண்ணமே தான் உள்ளது. இந்த முட்டையை வைத்து சுவையான முட்டை வட்டிலப்பம் செய்வது எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

  • முட்டை
  • பால் பவுடர் சிறிதளவு
  • சர்க்கரை தேவையான அளவு
  • ஏலக்காய் இரண்டு
  • உப்பு சிறிதளவு

செய்முறை

எடுத்து வைத்திருக்கும் முட்டையை கிண்ணத்தில் உடைத்து ஊற்றவும், அதனுடன் பால் பவுடர் மற்றும் சர்க்கரையை நன்றாக சேர்த்து நுரை வரும் அளவிற்கு அடிக்கவும். அதன் பின்பு ஏலக்காயை இடித்து அதன் மீது தூவி, லேசாக உப்பு போட்டு கிளறிவிட்டு இட்லி அவிப்பது போல ஆவியில் அவித்து எடுக்கவும்.

நன்கு வெந்தவுடன் எடுக்கும்பொழுது பூ போல பொங்கி அழகாக இருக்கும். தற்பொழுது சுவையான வட்டிலப்பம் தயார். பின்பு அதை உங்கள் குழந்தைகளுக்கு வெட்டி ஆளுக்கு ஒரு துண்டாக கொடுத்தால் நிச்சயமாக வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். 

author avatar
Rebekal