தமிழக மாணவர்களுக்கான புதிய கல்வி தொலைக்காட்சியை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்!

தமிழக பள்ளி மாணவர்களுக்காக,  தமிழக அரசானது புதிய கல்வி தொலைக்காட்சியை தற்போது

By manikandan | Published: Aug 26, 2019 11:24 AM

தமிழக பள்ளி மாணவர்களுக்காக,  தமிழக அரசானது புதிய கல்வி தொலைக்காட்சியை தற்போது தொடங்கியுள்ளது. இந்த கல்வி தொலைக்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா நூற்றாண்டு விழா அரங்கத்தில் வைத்து தொடங்கி வைத்தார். உடன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் மற்ற அமைச்சர்கள் எம்.ஏக்கள் என பலர் இந்த விழாவில் கலந்துகொணடனர். இந்த கலவி தொலைக்காட்சியில், மாணவர்கள் நலன் சார்ந்து விளையாட்டு, அடுத்து என்ன படிக்கலாம், கற்றல் நுட்பம் என 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இதில், காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8 வது மாடியில் சில  கோடிகள் செலவிட்டு இந்த புதிய தொலைக்காட்சி அலுவலகம் பல உபகாரணங்களோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி தொடங்கிய நிகழ்ச்சி நிரலை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நேரலையாக காண்பிக்க உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. மாணவர்கள் நிகழ்ச்சியை பார்ப்பதை போட்டோ எடுத்து அரசுக்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc