தமிழக முதல்வர் – கேரளா முதல்வர் சந்திப்பு! நதிநீர் பங்கீடு தொடர்பான முக்கிய ஆலோசனை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கேரளா புறப்பட்டு சென்றார். தற்போது அவர் கேரள முதல்வர் பிரனாய் விஜயன் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய முடிவுகள் எட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதில் முக்கியமாக தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட கொள்கைகள் பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும், பரம்பிக்குளம் – ஆழியாறு மற்றும் ஆனைமலை – பாண்டியாறு – புன்னம்புழா இணைப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் உடன் உடன் சென்றனர். அவர்கள் இன்று இரவு விமானம் மூலம் தமிழ்நாடு திரும்பி வரவுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.