உலகப் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த டிசம்பரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பெரும் வரிக்குறைப்பை அறிவித்தார். இதன் தாக்கத்தால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வேகம் பிடிக்கும் என கருதப்படுகிறது.
அமெரிக்காவின் வரிக்குறைப்பு நடவடிக்கைகளால் வரவிருக்கும் நிதியாண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என உலகப் பொருளாதார மன்றம் கணித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2018-19ம் ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி 3.9 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த அக்டோபர் மாத கணிப்பைக் காட்டிலும் 0.2 புள்ளிகள் அதிகமாகும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த டிசம்பரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பெரும் வரிக்குறைப்பை அறிவித்தார். இதன் தாக்கத்தால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வேகம் பிடிக்கும் என கருதப்படுகிறது. உலகின் பெரும் பொருளாதார நாடான அமெரிக்காவில் ஏற்படும் மாற்றம் உலக நாடுகளிலும் விளைவை ஏற்படுத்தும் என உலக பொருளாதார மன்றம் கணித்துள்ளது…
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Leave a Comment