தொடர் கனமழை எதிரொலி : இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.மேலும் சென்னை , காஞ்சிபுரம் ,விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது .மேலும் தூத்துக்குடி , நெல்லை, வேலூர் ,திருவண்ணாமலை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்  என்று தெரிவித்தது வானிலை ஆய்வு மையம்.

இதன் விளைவாக பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளுர், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இன்று  நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகளும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது . அண்ணா பல்கலை.யின் கீழ் செயல்படும் கல்லூரிகள், 4 வளாகங்களின் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.