உணவை இவ்வாறு சாப்பிட்டால் நோயே வராதாம்! எப்படி தெரியுமா?

நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நாம் உயிர்வாழ்வதற்கு

By leena | Published: Aug 03, 2019 09:30 AM

நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நாம் உயிர்வாழ்வதற்கு நீருக்கு அடுத்தது, உணவு மிகவும் அவசியமான ஒன்று. இந்த உணவினை நாம் பல வழிகளில் விதவிதமாக உண்ணுகின்றோம். நாம் உண்ணுகின்ற அனைத்து உணவுகளும் நமக்கு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதாக இருப்பதில்லை. ஏனென்றால் வளர்ந்து வரும் மேலை நாட்டு நாகரீக முறையால், நமது தமிழ் கலாச்சாராமே இன்று சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், உணவு மட்டும் தமிழ் கலாச்சாரப்படியே இருக்கிறது என்று சொன்னால், அது நம்ப தகுந்த ஒரு விடயம் அல்ல. மனிதன் என்று, தமிழ் கலாச்சார உணவுகளான இயற்கையான உணவுகளை மறந்தானோ, அன்றே அவனது உடலில் நோய்களும், ஆரோக்கியமின்மையும் தானாக வந்துவிட்டது. நமது முன்னோர்கள் இயற்கையான உணவுகளை உண்டு, 100 வயது வரையிலும், அதற்கும் அதிகமான காலங்கள் வாழ்ந்தவர்களுக்கு உண்டு. ஆனால், நமது தலைமுறையே 50 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதே கேள்விக்கு குறியாக தான் உள்ளது. நாம் உண்ணுகின்ற உணவு மட்டும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக இருந்தால் போதாது. அந்த உணவினை எவ்வாறு உண்ணுகின்றோம் என்பதிலும், சில வழிமுறைகள் உள்ளது. அதென்னவென்றால், நாம் உணவுகளை கரண்டியை பயன்படுத்தி சாப்பிடுவதை விட கைகளால் உண்ணுவதே சிறந்தது. இவ்வாறு சாப்பிடுவதால், தசைகளுக்கு உடற்பயிற்சி கொடுப்பது மட்டுமில்லாமல், இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. ஆனால், கைகளால் சாப்பிடும் போது பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் கைகள் வழியாக தொற்றுநோய் கிருமிகள் பரவுகிறது. இதனால், நாம் உண்ணும் போதெல்லாம் நன்கு கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவிவிட்டு, சாப்பிட்டால் தொற்றுநோய் அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
Step2: Place in ads Display sections

unicc