அல்பேனியா நாட்டில் தொடர் நிலநடுக்கம்..! 68 பேர் காயம்!

அல்பேனியா நாட்டின் துறைமுக நகரம், டூயுரஸ். இங்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம்

By surya | Published: Sep 22, 2019 11:25 AM

அல்பேனியா நாட்டின் துறைமுக நகரம், டூயுரஸ். இங்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.05 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தது. மேலும் இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமாகின. Image result for albania earthquake இது 5.4 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இன்று அதிகாலை 2.53 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் ரிக்டர் அளவு 6.4 ஆக பதிவானது.
Step2: Place in ads Display sections

unicc