நமது உடல் ஆரோக்கியத்தை துரிதப்படுத்தும் துரியன் பழம்.....!!!

துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. துரியன் பழம்

By leena | Published: Feb 27, 2019 11:06 AM

  • துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது.
  • துரியன் பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, பல நோய்களை குணப்படுத்துகிறது.
நாம் அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை உண்கிறோம். அனைத்து பழங்களும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆரோக்கியத்தை அளிக்கிறது. பழங்கள் நமது உடலில் உள்ள நோய்களை இயற்கையான முறையில் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களை சாறாக குடிப்பதை விட மென்று சாப்பிடுவது நல்லது.

துரியன் பழம்

துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம், இனிப்பு சுவை உடையது. இதன் பழம் மட்டுமன்றி, இலைகளும் மருத்துவ குணம் கொண்டது. Image result for துரியன் பழம் துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புசத்து, கார்போஹைட்ரேட், நார்சத்து, துத்தநாகம்,புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளது. வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமான இரும்புசத்து இந்த பழத்தில் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

Image result for நோய் எதிர்ப்பு சக்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மது, போதை போன்ற தீய பழக்கத்தால் உடல் வலுவிழந்தவர்களுக்கு இந்த பலம் நல்ல மருந்து.

கருப்பை பிரச்சனை

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை பிரச்சனைகளுக்கு இந்த பழம் நல்ல மருந்தாக பயன்படுகிறது. Image result for கருப்பை பிரச்சனை கருப்பை பலவீனம், கரு களைதல், இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால் கருப்பை பலப்படும்.

பசி

Related image சிலருக்கு பசியுணர்வே இல்லாத நிலை காணப்படும். இதனால் பல நோய்கள் ஏற்பட கூடும். இந்த துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியை தூண்டி பசியை ஏற்படுத்தும்.

ஒற்றை தலைவலி

Image result for ஒற்றை தலைவலி ஒற்றை தலைவலி வந்தால் நாம் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். இந்த பழத்தில் ஒற்றை தலைவலியை போக்க கூடிய ரிபோபிளேவின் சத்து அதிகமாக உள்ளது.

முதுமை தோற்றம்

சிலர் மிகச் சிறிய வயதிலேயே மிகவும் வயது முதிந்தவர்கள் போல காணப்படுவார்கள். துரியன் பழம் முதுமை தோற்றத்தை தடுத்து, இளமை தோற்றத்தை பிரதிபலிக்க செய்கிறது. Image result for முதுமை தோற்றம் இந்த பழத்தில் முதுமை தோற்றத்தை தடுக்க கூடிய வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக உள்ளது.

இரத்த அழுத்தம்

Image result for இரத்த அழுத்தம் இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பழம் நல்ல தீர்வை அளிக்கிறது. இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
Step2: Place in ads Display sections

unicc