வைரலாகும் “சூப்பர் டீலக்ஸ் ” ட்ரைலரில் விஜய் சேதுபதி பேசிய டப்பிங்க் வீடியோ !!!

  • “சூப்பர் டீலக்ஸ்” படத்தை YNOTX நிறுவனம் வெளியிட உள்ளது இந்த படத்தை இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்க இருக்கிறார்.
  • “சூப்பர் டீலக்ஸ்”  ட்ரைலரில் விஜய் சேதுபதி பேசிய டப்பிங் வீடியோ தற்போது வெளியானது

நடிகர் விஜய் சேதுபதி தமிழ்  சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.இவர் “தென்மேற்கு பருவ காற்று ” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான “பேட்ட” திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

இந்நிலையில்  தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் “சூப்பர் டீலக்ஸ்” படத்தை YNOTX நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தை இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கு  பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில்  “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது.  “சூப்பர் டீலக்ஸ்”  ட்ரைலரில் விஜய் சேதுபதி பேசிய டப்பிங் வீடியோ தற்போது வெளியானது ..

author avatar
murugan

Leave a Comment