போதை மாத்திரைக்கு மயங்கும் கல்லூரி மாணவர்கள்.. வருங்கால இந்தியா எங்கே செல்கிறது?.. பரிதவிக்கும் பெற்றோர்கள்..

தலைதூக்கும் போதை கடத்தல் கும்பலின் அட்டகாசம். சென்னையில்

By kaliraj | Published: Jan 16, 2020 03:46 PM

  • தலைதூக்கும் போதை கடத்தல் கும்பலின் அட்டகாசம்.
  • சென்னையில் 240 போதை மாத்திரைகளுடன் அதிரடி கைது.
சென்னை  சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே நேற்று இரவு  பூக்கடை போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்க்கு இனமான வகையில்  அந்த பகுதியில் 3 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விசாரிக்க சென்றபோது  ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரையும்  கைது செய்த காவல்துறையினர்  அவர்கள் வைத்திருந்த  பையை சோதனை செய்தபோது அதில் 240 போதை மாத்திரை இருந்தது தெரியவந்தது. இவர்கள்  தனியார் கல்லூரி மாணவர்கள்ஆவர். இவர்களின் பெயர்  நவீன், அரிகிருஷ்ணன்  என்பதும்  ஆந்திர மாநிலம் நெல்லூரில் போதை மாத்திரை வாங்கி ரயில் மூலம் சென்னை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இவர்கள் இருவரும், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய  போதை மாத்திரைகளை கடத்தி வந்தார்களா? அல்லது இவர்களே பயன்படுத்த வாங்கி வந்தார்களா?  இவர்களுக்கும் போதை  கடத்தல் கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என  பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து  வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc