சென்னையின் குடிநீர் பற்றாக்குறை வேகமாக தீர்ந்துவிடும்-அமைச்சர் வேலுமணி

நேற்று  தமிழக அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரும்  ஆந்திராவிற்கு

By venu | Published: Aug 10, 2019 07:32 AM

நேற்று  தமிழக அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரும்  ஆந்திராவிற்கு  சென்றனர்.அங்கு முதலமைச்சர்  ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து  கிருஷ்ணா நதிக்கு  தண்ணீர்  திறந்து விடும்படி வலியுறுத்தினார்கள். இதற்கு பின் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு தரவேண்டிய கிருஷ்ணா நதி நீரை உடனடியாக திறந்துவிட ஆந்திர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் முலம் சென்னையின் குடிநீர் பற்றாக்குறை வேகமாக தீர்ந்துவிடும் என்று  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc