கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க இந்த ஜூஸை குடிங்க !இது உடல் எடையையும் குறைக்குமாம் !

கோடைகாலம் வந்தாலே நம்முடைய பல வேலைகள் தடைபடும்.கோடை வெப்பத்தை  நம்மால் தாங்க முடியாத காரணமும் ஒன்று.கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க நாம் நீர்  சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து கொள்ளவது மிகவும் அவசியமாகும்.

கோடைகாலத்தில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் அவசியம்.மேலும் கோடைகாலத்தில் கிடைக்கும் பழவகைகளையும் சாப்பிடலாம்.

அந்த வகையில் கோடைகாலத்தில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று பெர்ரீஸ். மேலும்  பெர்ரியில் அதிகஅளவு ஆண்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் செல்களை பராமரித்து நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது உடலில் மெட்டபாலிசத்தை சீராக வைத்து சருமத்தை பள பளப்பாக வைத்திருக்க உதவுகிறது.மேலும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வரலாம். இந்த பழத்தில் அதிக அளவு நார்சத்து நிறைந்து காணப்படுகிறது.

இந்த பழத்தை பயன்படுத்தி ஜூஸ் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள் :

பெர்ரி -(ப்ளூ  பெர்ரி, மல் பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ் பெர்ரி)-5

பாதாம் பால் -3/4 கப்

சியா விதைகள் -1/2 ஸ்பூன்

சில்கன் டோஃபு -1/4

செய்முறை :

பெர்ரீஸ் , பாதாம் பால் , சில்கன் டோஃபு  முதலிய வற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.அதனுடன் சிறிதளவு சியா விதைகள் சேர்த்து அரைத்து பருகுவது மிகவும் நல்லது.