உங்களுடைய முகம் பளிச் பளிச் என மின்னிட வேண்டுமா அப்ப இந்த ஜூஸை தினமும் குடிங்க !

நமது சருமத்தையும் ,அழகையும் பாதுகாக்க நாம் பல வகையான முயற்சிகளை செய்து வருகிறோம்.

By Fahad | Published: Mar 28 2020 06:00 PM

நமது சருமத்தையும் ,அழகையும் பாதுகாக்க நாம் பல வகையான முயற்சிகளை செய்து வருகிறோம். அதுக்காக பல இயற்கை வழிமுறைகளை விட பலவகையான செயற்கை அழகு சாதனங்களை பயன்படுத்தி சருமத்தின் அழகை கெடுத்து விடுகிறாம். அந்த வகையில் நமது சருமத்தில் இருக்கும் பல வகையான பிரச்சனைகளை சரி செய்ய இந்த ஆரஞ்சு மற்றும்  டீ-டாக்ஸ் ஜூஸை தினமும் குடித்தால் மிகவும் நல்லது. சரும பிரச்னைகளை நீக்கி சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் ஜூஸை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள் :

ஆரஞ்சு பழம் -1 எலுமிச்சை சாறு -1 ஸ்பூன் மஞ்சள் -1/4 ஸ்பூன் கேரட் -1 இஞ்சி -சிறிய துண்டு

செய்முறை :

ஆரஞ்சு பழத்தை தோல்களை நீக்கி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பின்பு ஜூஸ் ஜாரில் நறுக்கிய கேரட் துண்டுகள், இஞ்சி, மஞ்சள் , எலுமிச்சை சாறு முதலியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்பு வடிகட்டி ஜூஸ் கப்பில் ஊற்றி பரிமாறவும்.இப்போது ஆரஞ்சு டீ-டாக்ஸ் ரெசபி ரெடி.

குறிப்பு :

  • இந்த பானத்தை நாம் நமது டயட்டில் தினமும் எடுத்து கொள்வதால் அது நமது முகத்தை மட்டுமல்லால் உடலையும் பொலிவாக வைத்திருக்கும்.
  • ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சாது நமது சருமத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
  • மேலும் இந்த ஜூஸில் மஞ்சள் கலந்து இருப்பதால் இது பொலிவை ஏற்படுத்துவதுடன் நோய்  எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும்.