தொடை மற்றும் வயிறு பகுதிகளில் உள்ள கொழுப்பை சீக்கிரமாக கறைக்க இந்த பானத்தை குடிங்க !

நமது அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நம்மை பல பலப்படுத்தவும்

By Priya | Published: Jul 18, 2019 03:11 PM

நமது அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நம்மை பல பலப்படுத்தவும் செய்யும் நம்மை பலவீனமாகவும் செய்யும். இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடற்பருமன். உடல் எடை அதிகரித்து இருந்தால் அது நமது உடலுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்திவிடும்.சர்க்கரை நோய் , இதயநோய் மற்றும் பல நோய்களையும் நமக்கு கொடுத்து விடும்.சிலர் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் எடை இதனாலும்  அதிகரிக்க வாய்ப்புள்ளது. வயிறு மற்றும் தொடை பகுதிகளில் உள்ள கொழுப்புகளை  கரைக்கும் பானம் எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள் :

கிராம்பு -5 தண்ணீர் -2 டம்ளர் கருப்பு உப்பு -1 தேக்கரண்டி

செய்முறை :

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி கிராம்பை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து  கொதித்தவுடன் வடிகட்டி அதில் கருப்பு உப்பு சேர்த்து  இரவில் சாப்பாட்டிற்கு பிறகு குடித்து வர வேண்டும்.இவ்வாறு குடித்து வந்தால் அது நமது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதோடு தொடை மற்றும் வயிற்று பகுதிகளில் உள்ள சதைகளையும் குறைக்க உதவுகிறது.

உடற்பயிற்சி :

தினமும் காலை ,மாலை என இரு வேலைகளிலும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமாகும்.  இதனுடன் நடை பயிற்சி ,ஓடுதல்,சைக்கிள் ஓட்டுதல் முதலிய பயிற்சிகளையும் நாம் மேற்கொள்வது மிகவும் நல்லது.

 கொழுப்பு உணவுகளை தவிர்த்தல் :

எண்ணையில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக காய்கறிகள் ,பழங்கள் முதலியவற்றை நமது உணவில் தினமும் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.      
Step2: Place in ads Display sections

unicc