ஆண் நண்பருடன் இணைந்து மது அருந்திய மாணவி..! வீடியோ வெளியானதால் விபரீத முடிவு

ஆண் நண்பருடன் இணைந்து மது அருந்திய மாணவி..! வீடியோ வெளியானதால் விபரீத முடிவு

  • இளைஞருடன்  4 கல்லூரி மாணவிகள் இணைந்து மது அருந்திய வீடியோ
  • வெளியானதால் கல்லூரியில் இருந்து அதிரடி நீக்கம், ஒருவர் மாணவி தற்கொலை முயற்சி
மயிலாடுதுறையில் இளைஞர்களுடன் இணைந்து மது அருந்திய வீடியோ வெளியானதால் கல்லூரி மாணவிகளில் ஒருவர்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் 4 மாணவிகள் கல்லூரி  சீருடையுடன் இளைஞர்கள் உடன் சேர்ந்து மது அருந்துகின்ற அவலக் காட்சியானது சமூக வலைதளங்களில் வெளியாகி அது பெரும் சர்ச்சைக்குள்ளானது.இந்த வீடியோவானது மது அருந்தி மயக்கத்தில் தத்தளித்த மாணவிகள் பயின்று வ்ரும் கல்லூரி நிர்வாகத்தின் பார்வையில் படவே  4 பேரையும் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கியது நிர்வாகம். இதனால் வேதனையடைந்த அம்மாணவிகளில் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளார்.இந்நிலையில் உடனடியாக அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அவருக்கு தீவிர சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. தான் மது அருந்தும் வீடியோவானது வெளியாகி சர்ச்சையாகிய அவமானத்தால் அந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்த மாணவிக்கு 4 லட்சம் அபராதம்..!
"ரிடையர்ட் ஆகாதிங்கனு இளம் வீரர்கள் சொன்னாங்க" யுனிவர்சல் பாஸ் பெருமிதம்!
கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஆப்ரிக்கன் துலிப் மலர்கள்.!
மிசோரம்: ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு!
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
கலிபோர்னியாவில் மளமளவென பரவும் காட்டுத்தீ.!
இறந்தவரின் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.!
பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட மாணவி..!
குறையுமா வெங்காய விலை? ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்!
கொரோனாவுக்கு உயிரிழந்த அதிமுக ஒன்றிய செயலாளர் வரதராஜ்.!