ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத மருத்துவர் தம்பிதுரை! முதல்வர் பாராட்டு!

ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத மருத்துவர் தம்பிதுரை! முதல்வர் பாராட்டு!

ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத மருத்துவர் தம்பிதுரை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாத காலமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில்,இந்த  , இருந்த நிலையில்,  மருத்துவர்கள்,போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியில் வந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில், ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஒரு நாள் கூட விடுப்பு  மருத்துவர் தம்பிதுரைக்கு, முதல்வர் பழனிசாமி ட்வீட்டரில் பாராட்டு  தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்துவரும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். அதேசமயம் அவரது உடல்நலனையும் கவனித்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube