PUBG கேம்மை முந்த புதுவித கேம்மை இறக்கும் ஜப்பான்..! ரிலீஸ் தேதி உள்ளே!

ஆன்லைன் கேமிங் படு ஜோராக எல்லா நாடுகளிலும் சூடுபிடித்துள்ளது. மற்ற நாட்டினரை காட்டிலும் நம் நாட்டில் தான் இதன் தாக்கம் முன்பை விட அதிக அளவில் உள்ளது என ஆய்வுகள் சொல்கின்றன. காலங்கள் மாற மாற கேம்களும் பலவிதங்களில் உருப்பெற்று வந்துள்ளன.

கேண்டி க்ரஷ், டெம்பிள் ரன்னர், ஃபிரீ பையர் இவற்றின் வரிசையில் கொடிகட்டி பறக்க களம் இறங்கியது தான் PUBG கேம். அதே போல தனது பல சாதனைகளை இது வெற்றி கரமாக நிகழ்த்தியும் உள்ளது. இதையும் முந்த இப்போது ஒரு கேம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அது என்ன கேம் என்பதை இந்த பதிவில் அறிவோம்.

கேம்களும் மோகமும்
உலக நாடுகளே இந்த வகை ஆன்லைன் கேம்களின் மீது தனிவித மோகத்துடன் இருக்கின்றது. இவை பல கோடிகளை இந்த கேம்களை உருவாக்கியவருக்கு பெற்று தருகிறது. இதில் ‘ப்ளூவேல்’ போன்ற கேம்கள் உயிரையே பறித்து விடும் அபாயகரமான கேம்களும் அடங்கும்.

புதுவித கேம்!
PUBG கேமை போன்றே இப்போது டெக் உலகில் புதுவித கேம் ஒன்று வர உள்ளது. இதன் பெயர் ‘Dr. Mario World’ என்பதாகும். இது ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட கேம்மாகும். இதை பற்றிய தகவலை கேட்டதும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது.

எப்போது?
இந்த ‘Dr. Mario World’ கேம் எப்போது ரிலீஸ் ஆகும் என நெட்டிசன்கள் அதிக ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இதன் ரிலீஸை இந்த வருடத்தின் நடுவில் வெளியிட போவதாக இந்த கேம்மை உருவாக்கியர்கள் கூறுகின்றனர்.

வரவேற்பு
பொதுவாக ஆன்லைன் கேம்கள் மீது பலருக்கும் இன்றைய கால கட்டத்தில் அதிக ஆர்வம் உள்ளது. அந்த வகையில் இது போன்ற கேம்களை மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இவை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போனிற்கும் வெளியிடப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதுவித கேம்மை அளவாக விளையாட நாமும் காத்திருப்போம்!

Leave a Comment