திமுக சார்பில் கலந்து கொள்ளும் டி.ஆர்.பாலு

ஏப்ரல் 9-ஆம்  தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.பின்னர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து  கொரோனா குறித்து நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஏப்ரல் 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் பிரதமர் மோடி திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசினார்.அதில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.அழைப்பை ஏற்ற ஸ்டாலின்,  கூட்டத்தில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.