பழைய சாதம் தானே என்று சாதாரணமா நினைக்காதீங்க!

நம்மில் அதிகமானோர் இன்று நாகரீகம் என்கிற பெயரில் நம்முடைய கலாச்சார உணவுகளை மறந்து, மேலைநாட்டு உணவுகளுக்கு மாறியுள்ளனர். அதாவது நம்முடைய முன்னோர்கள் பல்லாண்டு காலம் வாழ்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது தமிழ் கலாச்சார உணவுகள்தான். அதிலும் மிக மிகப் பழமையான உணவு என்னவென்றால் நாம் காலையில் உண்ணக்கூடிய பழைய சோறு தண்ணீர் தான்.

இதனை நீராகாரம் என்றும் அழைக்கின்றனர் ஆனால் இன்று நாகரீகம் வளர்ந்தது என்கின்ற பெயரில், இதனை ஐயையோ பழைய சோறா? என்று பலர் கேள்வி எழுப்பியும் வருகின்றனர். ஆனால் இந்த பழைய சோற்றில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது பற்றி தற்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் உஷ்ணம் 

உடல் உஷ்ணம் என்பது பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான். இந்த உஷ்ணத்தை தடுப்பதற்கான பல்வேறு முறைகளை கையாண்டு இருக்கலாம். ஆனால் தொடர்ந்து காலையில் பழைய சோற்று தண்ணீரை குடித்து வந்தால், நமது உடல் உஷ்ணத்தைக் குறைப்பதோடு, குளிர்ச்சியாகவும் நமது உடலை ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது.

 குடல்புண்

இன்று பள்ளிகளுக்கு, அலுவலகங்களுக்கு மற்ற வேலைகளுக்கு என்று காலையிலேயே ஆண்கள், பெண்கள் என இருவருமே விறுவிறுப்பாக செல்கின்றன. காலையில் செல்லும்போது அவர்களுக்கு காலை உணவை சாப்பிடுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

இதனால் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு நாம் பல்வேறு முறைகளை மேற்கொண்டாலும், இதற்கு சிறந்த மருந்து என்றால் அது பழைய சாதம் தான். இந்த பழைய சாதத்தில் உருவாகும் லாக்டிக் ஆசிட் பாக்டீரியா தான் புளிப்பு சுவையை தருகிறது. மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை இருக்கிறது.

மலசிக்கல் 

இன்று பெரும்பாலானோர் பாதிக்கப்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். இதற்கு தீர்வாக நாம் பல மருந்துகளை தேடி சென்றாலும், இதற்கு தீர்வாக அமைவது என்னமோ பழைய சாதம் தான். இதை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது உடல் சீராக இயங்குவதோடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.