அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்க வேண்டாம் -  அமைச்சர் உதயகுமார் 

Don't take selfies in hazardous areas - Minister Udayakumar

தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது.தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வருவாய்த்துறை  அமைச்சர் உதயகுமார்  பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வெள்ளம் பாதித்த கோவை - நீலகிரி மாவட்டத்தில் 55 முகாம்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .நீலகிரி மாவட்டத்தில் வெள்ள நிலமை கட்டுப்பாட்டில் உள்ளது. உதகை, கூடலூர் வட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். தாழ்வான பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.மழை நிற்கும் வரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் 100% உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்க இளைஞர்கள் முயற்சிக்கவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

The South West Monsoon is currently intensifying. Revenue Minister Udayakumar said in a statement. Extensive attention will be given to the areas most affected by the Udayakkal and Koodalur circles. About 15 thousand people have been evacuated from low-lying areas. Do not leave the house until the rain stops. 100% casualties can be avoided if the public cooperates. Young people should not attempt to take selfies in dangerous places.