மாற்றுத்திறனாளி என்று கூறாதீர்கள்! எல்லாரும் கடவுளின் குழந்தைகள்!

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பிரபல முன்னணி நடிகர்களின் படமான

By leena | Published: Sep 18, 2019 12:20 PM

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பிரபல முன்னணி நடிகர்களின் படமான காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், நடிகர் கமலஹாசன் அவர்கள் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், சாக்ஷி ஒயிட் ஷாடோஸ் நடத்திய பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்களான யாஷிகா ஆனந்த், ரேஷ்மா. அபிராமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க கொண்டு பேசிய சாக்ஷி, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களை மாற்றுதிறனாளிகள் என்று கூறாதீர்கள். அவர்கள் எல்லாரும் கடவுளின் குழந்தைகள். சாதாரண மனிதர்களை விட அவர்கள் சிறந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc