பிகில் படத்தையும் விட்டு வைக்கலையா? தொடரும் தமிழ் ராக்கர்ஸின் அட்டூழியம்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி உள்ள நிலையில், மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், பிகில் திரைப்படம் வெளியிடப்பட்டு சில மணி நேரத்திலேயே, இப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸின் இந்த செயல் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.