முட்டை சாப்பிட்டவுடன் தெரியாம கூட இதெல்லாம் சாப்பிடுறாதீங்க!

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு.

By leena | Published: Nov 10, 2019 02:20 PM

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. நமது அன்றாட உணவில் நாம் அடிக்கடி முட்டையை சேர்த்து கொள்கிறோம். அதற்கு காரணம் அதிலிருக்கும் சத்துக்கள் தான். முட்டையில் உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்கள் இருந்தாலும், அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பது தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. முட்டை சாப்பிட்ட பின்போ அல்லாது சாப்பிடும் போதோ இந்த உணவுகளை எல்லாம் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வாத்து இறைச்சி

முட்டை சாப்பிட்ட பின் வாத்து இறைச்சி சாப்பிட கூடாது. முட்டையில் புரதம் மற்றும் குளிர்ச்சி பண்பு உள்ளது. இதே குணாதிசயம் வாத்து இறைச்சியிலும் உள்ளது. இந்த இரண்டு பண்புகளும் ஒன்றாக உள்ள உணவுகளை சாப்பிடும் போது, செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

பெர்சிமோன்

முட்டை சாப்பிட்ட பின் பெர்சிமோன் பழங்களை சாப்பிட கூடாது. அவ்வாறு அப்பளத்தை சாப்பிடுவது விஷத்தை சாப்பிடுவதற்கு சமம். அவ்வாறு சாப்பிட்டால், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்ரவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சோயா பால்

முட்டையுடன் சேர்த்து சோயா பாலை குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. அவ்வாறு  குடிப்பதால்,உடலில் சிதைவு பிரச்சனையை ஏற்படுத்துவதுடன், நமது உடல் புரோட்டின் சத்துக்களை உறிஞ்சுவதையும் கடினமாக்குகிறது.

பழங்கள்

முட்டை சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிட கூடாது. பழங்கள் 15 நிமிடத்தில் செரிமானம் ஆகிவிடும். ஆனால் முட்டை செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.
Step2: Place in ads Display sections

unicc