உங்கள் கணவரை இந்த வார்த்தைகளால் திட்டாதீர்கள்

கணவனை இந்த வார்தைகளை பயன்படுத்தி திட்டுவதை தவிர்க்க வேண்டும்.

கணவன்-மனைவி உறவு என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, பாசத்துடன் வாழ்வது ஆகும். ஆனால், இன்று இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்லை. குடும்பத்தில் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் இந்த புரிந்துகொள்ளும் தன்மை இல்லாதது தான்.

இன்று நாகரீக வளர்ச்சியால், மனிதர்கள் தங்களுக்குள் உறவுகள் வளர்த்துக் கொள்வதை விட,  தொழில்நுட்ப பொருட்களுடன் தான் உறவுகளை வளர்த்துக் கொள்கின்றனர். கணவன் – மனைவி இருவருக்குள்ளும் எதிர்பாராத விதமாக சண்டைகள் வரலாம். அவ்வாறு சண்டைகள் வந்தாலும், நாம் பேசும் வார்த்தையில் நிதானம் இருக்க வேண்டும்.

கணவனை, மனைவி தாறுமாறான வார்தைகளால் திட்டக் கூடாது. கணவனோ, மனைவியோ ஒருவரை மற்றோருவர் எக்காரணம் கொடும், ‘என்ன நீ நடிக்கிறாயா?’ என்று கேட்க கூடாது. இது இருவருக்குள்ளும் அதிகப்படியான கோபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வார்த்தை. எனவே இந்த வார்த்தையை தவிர்ப்பது நல்லது.

மேலும், மனைவி, கணவனை பற்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் குறைத்து பேசக் கூடாது. முக்கியமாக கணவனை பார்த்து, நீ ஒரு தண்டம், ஒன்றுக்கும் உதவாதவன் போன்ற வார்த்தையை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.