முடிந்தது தேர்வுகள் - இன்று முதல் விடுமுறை

  • அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. 

By Fahad | Published: Apr 02 2020 04:00 PM

  • அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. 
  • தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியது.கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 11,12 -ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள்  கடந்த 20 ஆம் தேதி முடிந்தது.கடந்த டிசம்பர் 13 -ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கியது. தேர்வுகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில்  அரையாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுகள் முடிந்தது.தேர்வுகள் முடிந்த நிலையில் இன்று முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்த பின்பு  ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு அடுத்தடுத்து வருவதால், பள்ளிகளும் இயங்காது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும்  பல்கலைக்கழகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.