வரி விதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச இருப்பதாக டொனால்டு டிரம்ப் அறிவிப்பு !

நாளை மற்றும் நாளை மறுநாள் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி , டொனால்டு டிரம்ப் போன்ற உலகத்தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.இந்நிலையில் அமெரிக்கா கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரியை  அதிகரித்தது .
இந்நிலையில் கடந்த ஜூன் 1 தேதி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு  கூடுதல் வரி விதிக்கப்பட்டது.அமெரிக்கா பொருள்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட கூடுதல் வரி தொடர்பாக  பிரதமர் மோடியுடன் பேச காத்திருப்பதாக டொனால்டு டிரம்ப்  ட்விட்டரில் கூறியுள்ளார்.


 
 

author avatar
murugan