சரும தளர்ச்சி நீக்க இதை வாரத்தில் இரண்டு நாள்கள் செய்தல் போதும்.!

சரும தளர்ச்சி நீக்க இதை வாரத்தில் இரண்டு நாள்கள் செய்தல் போதும்.!

பெண்கள் சற்று வயது ஆன பின்னர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று சரும தளர்ச்சி. சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை என்றாலும் இந்த சரும தளர்ச்சி ஏற்படும் அது மட்டுமல்லாமல் முகத்தில் சதை வளரும் போது சருமம் சுருங்கி தொங்கத் தொடங்கும்.

அத்தகைய சருமத்தின் தளர்ச்சியை போக்கி இதை செய்தால் போதும் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சரி செய்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

பாதம் -4

பாலில் ஊற வைத்த ஓட்ஸ் 4 ஸ்பூன்.

பாலில் ஊரவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ

கடலைமாவு 2 ஸ்பூன்

செய்முறை:

பாதாமை பவுடராக அரைத்துக் கொள்ளவும. ஒரு கிண்ணத்தில் அரைத்த பாதாம் பவுடரை போட்டு அதனுள் பாலில் ஊற வைத்த ஓட்ஸ் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

இவற்றுடன் கடலைமாவு சேர்த்து குழைத்துக் கொள்ளவும் சில நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.இந்த கலவையை முகத்தில் தடவதற்கு முன் முகத்தை பால் வைத்து நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.

முகத்தில் பால் தடவிவிட்டு பஞ்சினால் துடைத்து கொள்ளவும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் வைத்து கொள்ளும்.பின்னர் மெல்லிய துணியை முகத்தின் மேல் பொருத்திவிட்டு கலந்து வைத்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யவும்.

அதன் பின்னர் சில நிமிடம் கழித்து நீக்கிவிடவும். இதை வாரத்தில் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் செய்து வரலாம்.

author avatar
murugan
Join our channel google news Youtube