கார் டயரில் சிக்கிய நாயின் தலை.. நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

Dog stuck in car tire .. Rescue after long struggle ..!

சிலி நாட்டில் வண்டி சக்கரத்தில் நடுவே சிக்கிய நாயை அவசர சேவைப் பிரிவினர் பத்திரமாக மீட்டனர். சிலி நாட்டில் உள்ள ஹனோவர் நகரில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு கார் டயர் கிடந்தது. இதனை அங்கிருந்த 8 மாத பெண் நாய் ஒன்று, அந்தப் டயரை பார்த்ததும் தனது தலையால் அதனை உருட்டி மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த நாயின் தலையானது காரின் நடுவே இருந்த வட்டத்திற்குள் நுழைந்தது. Image result for கார் டயரில் சிக்கிய நாயின் தலை     தலையை வெளியே எடுக்க முடியாமல், நாய் கத்தியது. இதனைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள், அந்த நாயை மீட்க முயற்சி செய்து வந்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இந்நிலையில் அவர்கள் அவசரகால சேவை பிரிவிற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த அவர்கள், அந்த நாய் என் கழுத்தை தடவி முகத்தை பிடித்து அங்கும் இங்கும் அசைத்து, சில நிமிட போராட்டங்களுக்குப் பிறகு அந்த நாயை மீட்டனர். மேலும் அந்த நாயை கூடையில் அடைத்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர் நிலையில் அங்கு இருந்த பொதுமக்கள், அவர்களை பாராட்டினர்.