குரங்கிற்கு குழந்தையின் மீது ஆசையா? குழந்தையை இழுத்து செல்லும் குரங்கு!

குழந்தையை இழுத்து செல்லும் குரங்கு. இணையத்தில் வைரலாகும் வீடியோ. நம்மில்

By leena | Published: May 05, 2020 05:05 PM

குழந்தையை இழுத்து செல்லும் குரங்கு. இணையத்தில் வைரலாகும் வீடியோ.

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குரங்கு செய்யும் சேட்டைகளை ஆச்சரியத்துடன் பார்ப்பது உண்டு. அந்த வகையில், முன்னாள் பேஸ்பால் வீரரான ரெக்ஸ் சாப்மேன் என்பவர் தனது டுவிட்டரில் குரங்கு, குழந்தையிடம் சேட்டை செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், குரங்கு ஒன்று சைக்கிளில் வருகிறது. திடீரென்று சிலர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகே சைக்கிளை போட்டுவிட்டு, அந்த குரங்கு, அங்கு அமர்ந்திருக்கும் பெண் குழந்தையைப் பிடித்து இழுக்கிறது.

அங்கிருந்தவர்கள், குரங்கு இப்படி செய்யும் என்று சற்றும் குழந்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போது குரங்கு, கீழே விழுந்த குழந்தையின் சட்டையைப் பிடித்து தர தரவென இழுத்துச் செல்கிறது. இதனை பார்த்த அருகில் இருக்கும் ஒரு நபர், அந்த குரங்கை அதட்ட, குரங்கு குழந்தையின் சட்டையில் இருந்த கையை எடுக்கிறது. 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இதுவரை இந்த வீடியோவை 40 லட்சம் பேர்  பார்வையிட்டுள்ளனர். இதனை பார்த்த ஒருவர், குரங்கின் உரிமையாளர் அருகில்தான் உள்ளார் என்றும், அவர் அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டியுள்ளார். குழந்தைக்கு அருகில் சென்று குரங்கு நடந்து கொண்டதை அவர் எதிர்பார்க்கவில்லை என்றும், குழந்தையை குரங்கு இழுக்க முயன்றபோது அந்த உரிமையாளரும் கயிற்றை இழுத்துள்ளார். இதனால்தான் குரங்கு, குழந்தையை இழுப்பது போல தெரிகிறது என்றும் அவர் கூறி உள்ளார்.

 

Step2: Place in ads Display sections

unicc