பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் அந்த நபர் யாரு தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்

By Fahad | Published: Mar 28 2020 12:01 PM

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதோ அந்த லிஸ்ட், 1. அபிராமி, 2. கவின், 3.மதுமிதா, 4.லொஸ்லியா, 5.முகன் ஆகியோர் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் முகன் 5 வாக்குகளை பெற்றுள்ளார்.  இருப்பினும்,பிக்பாஸ் ரசிகர்களின் வாக்குகளை கொண்டு தான் யார் வெளியேறுவார்கள் என்பதை உறுதி செய்ய முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.