டாக்டர்னா இப்பிடி தாங்க இருக்கனும்! குழந்தைகளின் அழுகையை தடுக்க இந்த டாக்டர் என்ன செய்றாருனு பாருங்க!

இன்று சுநலத்திற்க்காக உழைக்கும் மருத்துவர்கள் மத்தியில், மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களும் இருக்க தான் செய்கின்றனர். இந்நிலையில், குழந்தைகள் நல மருத்துவரான ரியான் கொய்ட்ஸீ, குழந்தைகளுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய இரத்தம் எடுக்கும்போது வலி ஏற்படாமல் இருக்க Nat King Cole’s classic என்ற பாடலை பாடி அசத்துகிறார்.
அவர் இந்த பாடலை பாடும் போது, அந்தக் குழந்தையும் எந்தவித சலனமுமின்றி மருத்துவரின் பாடலைக் கேட்டு ரசிக்கிறது. அவரும் தேவையான இரத்தத்தை எடுத்துகொள்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ இப்படி பாட்டு பாடுவது வாடிக்கையாக நான் செய்வதுதான். அது காண்போருக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் அதனால் சிரிப்பார்கள், ரசிப்பார்கள். இது என்னுடைய மருத்துவ முறை என்று கூறியுள்ளார். இதில் ஒரு ஆச்சர்யமான விடயம் என்னவென்றால், அவர் மருத்துவம் மட்டுமல்லாமல் முறையான கிளாசிக்கல் மியூசிக்கும் கற்றறிந்துள்ளார் என்பது தான்.

மேலும், இந்த வீடியோவை குழந்தையின் தாய் கிரேஸி என்பவர்தான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில் “ இதற்கு முன் இப்படியான மருத்துவரைச் சந்தித்ததே இல்லை. காணும் யாரையும் சிரிப்புடனே வரவேற்கிறார். சிரித்த முகத்தோடு உற்சாகமாக அவர் இருப்பதே  நேர்மறையான எண்ணத்தை உருவாக்குகிறது. என்னுடய நாளை அவர்தான் சிறப்பாக்கியுள்ளார். என் மகள் இரத்தம் எடுத்தபோது எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் எப்போதும் போல் விளையாடினாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த சமூக வலைதளவாசிகள், இதுபோன்ற மருத்துவர்கள் இன்னும் பலர் வரவேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.