துருக்கி பொருட்கள் புறக்கணிப்பு! சவூதி அரசு அதிரடி முடிவு!

துருக்கி பொருட்களை புறக்கணிக்கும் சவூதி அரசு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக, சவூதி அரேபியாவில், ஜமால் கசோகி என்ற பத்திரிக்கையாளர், துருக்கி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், துருக்கியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஜவுளி உள்ளிட்ட  பொருட்களும், இறக்குமதி செய்யாமல் தாமதம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், மார்க்கெட் கடைகளில், அனைத்து துருக்கி பொருட்களையும், புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதன் பின்னணியில் சவூதி அரசு இருப்பதாக கூறப்படுகிற  நிலையில், துருக்கியில், ஏற்கனவே பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில், அரசுக்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.