மருத்துவர்கள் வரவில்லை! உயிரிழந்த 1 வயது குழந்தையை கட்டியணைத்து கதறி அழும் தந்தை!

உயிரிழந்த 1 வயது குழந்தையை கட்டியணைத்து கதறி அழும் தந்தை.

By leena | Published: Jun 30, 2020 12:16 PM

உயிரிழந்த 1 வயது குழந்தையை கட்டியணைத்து கதறி அழும் தந்தை.

உத்திர பிரதேசத்தில், கண்ணாஜ் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரிபூர் கிராமத்தில் வசிக்கும் பிரேம்சந்த்,  வயது குழந்தையை  காய்ச்சல் காரணமாக, கண்ணாஜில் உள்ள அரசு மருத்துவமனையில்  அனுமதித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சைக்காக அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தைக்கு, எந்த மருத்துவர்களும் வராத காரணத்தால் சிகிச்சையளிக்கவில்லை  என்றும், இதனால் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் குழந்தையின் தந்தை  குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர்  கூறுகையில், நாங்கள் சுமார் 45 நிமிடங்கள் அங்கே தங்கியிருந்தாலும், எந்த மருத்துவரும் வந்து  பார்க்கவில்லை. கான்பூருக்குச் செல்லும்படி எங்களிடம் கூறப்பட்டது. நான் ஒரு ஏழை; என்னிடம் பணம் இல்லை. நான் என்ன செய்ய முடியும்," என தெரிவித்துள்ளார்.

கண்ணாஜ் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கிருஷ்ணா ஸ்ரூப் குற்றசாட்டை மறுத்துள்ள நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், 'பிரேம்சந்த், மிஸ்ரிபூரில் வசிப்பவர். தனது மகன் அனுஜை மருத்துவமனையில் அனுமதித்தார். ஒரு குழந்தை நிபுணர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தார். ஆனால் குழந்தை அரை மணி நேர சிகிச்சைக்குப் பிறகு இறந்தது. குழந்தையை அனுமதிக்கவில்லை என்றும், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் சொல்வது தவறு.' என்று அவர் கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc