மருத்துவர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது..இனியும் அலட்சியம் கூடாது – முக ஸ்டாலின்

மருத்துவர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது..இனியும் அலட்சியம் கூடாது – முக ஸ்டாலின்

3 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என முதல்வர் தெரிவித்த நிலையில், தினந்தோறும் தொற்று அதிகரித்து வருவது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது – முக ஸ்டாலின் அறிவுப்பு.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மருத்துவர் நேற்று பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது என்று இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர் மக்களை காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார். இனியும் அதிமுக அரசு அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசர நிலையையே இது உணர்த்துகிறது என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, 3 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என முதல்வர் தெரிவித்த நிலையில், தினந்தோறும் தொற்று அதிகரித்து வருவது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். மருத்துவரின் உயிரிழப்பு என்பது வைரஸ் பரவலை தடுப்பதில் அதிமுக அரசு சிறுத்தும் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசரத்தையும், அவசியத்தையும் வலியுறுத்திக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் விரைவு பரிசோதனை கருவிகள் மூலம் மிக பரவலான சோதனைகள் நடத்தி, தொற்றின் அளவை மதிப்பீடு செய்து அதனடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube