அயலானை அடுத்து புதிய படத்தில் SK..!பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக்- பரிசளிக்கும் படக்குழு...கொண்டாட ரெடியாகும் ரசிகர்கள்

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான்று (பிப்.,17)டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக்

By Fahad | Published: Apr 05 2020 09:59 AM

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான்று (பிப்.,17)டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகர் மட்டுமல்லாமல் தனக்கென்று ரசிகர்களைக் கொண்டவர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில்அயலான்’ படத்தில் நடித்து வருகிறார்.படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படத்திற்கு அடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர்  நெல்சன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளார். இப்படத்திற்கு டாக்டர் என பெயரிடப்பட்டுள்ளது. https://twitter.com/kjr_studios/status/1228915273500987393 Image result for sivakarthikeyan நடிகை பிரியங்கா ஹூரோயினாக நடிக்கிறார். படத்தில் நடிகர் யோகிபாபு, வினய் உள்ளிட்ட முக்கிய வேடத்தில் பலர் நடிக்கின்றனர்.படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். நாளை சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் என்பதால் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு  அவருக்கு வாழ்த்துக்கூற படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை (பிப்ரவரி 17) காலை 11.03 மணிக்கு இப்படத்தில் FirstLooK வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Posts